இளம் காதலர்கள் பற்றி மட்டுமல்ல; அவர்களை பருந்தாக தேடி அலைபவர்கள் கையில் அவர்கள் சிக்கினார்களா என்பது கதை.
பருந்து என்று கழுகைத்தான் சொல்வார்கள். காக்கை மற்றும் வேறு எந்த பறவையாக இருந்தாலும் தட்டி தூக்கி விடும். அந்த டைட்டிலில் ‘பருந்து’ என்று ஒரு படம் வந்திருக்கிறது. இளம் காதலர்கள் பற்றி மட்டுமல்ல; அவர்களை பருந்தாக தேடி அலைபவர்கள் கையில் அவர்கள் சிக்கினார்களா என்பது கதை.
சின்னஞ்சிறு ஊரில் மதுரை அருகே மாரிமுத்து தனது மனைவி மற்றும் இரண்டு பருவ வயது மகள்களுடன் வசித்து வருகிறார். மூத்த மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் இளைய மகள் தான் காதலிக்கும் பையனுடன், வீட்டை விட்டு, ஊரை விட்டே ஓடிப் போகிறாள். டென்ஷனாகிறார் அப்பா மாரிமுத்து. போலீசுக்கு போனால் மானம் போய்விடும் என்று நினைத்து தன்னுடைய Well Wisher-ஆன ஊர் தலைவர் அழகுமலையின் உதவியை நாடுகிறார்.
வம்படியாக விஷயம் கேள்விப்பட்டு அங்கு வரும் தாய்மாமன் மன்சூர் அலிகான் தையா தக்கா என்று குதித்துக்கொண்டு அங்கு சத்தம் போடுகிறார். ஊர் தலைவர் தனது தம்பியுடன் சேர்ந்து ஓடிப் போனவர்களை பலபக்கம் தேடுகிறார். தாய் மாமன் மன்சூர் அலிகானும் தன்னுடைய ரவுடி குரூப்பை கூட்டிக்கொண்டு தேடி அலைகிறார்.
எந்த Motive-ம் இல்லாமல் ஓடிப் போகும் பள்ளிக்கூட பையனும், பெண்ணும் சீரியஸாக எதிர்கால வாழ்க்கை பற்றியெல்லாம் சிந்தித்து எதுவும் பேசவில்லை, நடந்துக் கொள்ளவில்லை. லாட்ஜில் ரூம் எடுத்து தங்குகின்றனர். பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்திருக்கிறார்கள். முன்பின் தெரியாதவரிடம் உதவி கேட்கின்றனர். இப்படியானவர்களைக் கண்டு நமக்கே கடுப்பாகிறது. அவர்களை மிஸ் செய்த பெற்றோருக்கும், தேடி அலையும் ஊர் தலைவருக்கும், தாய் மாமன் மன்சூருக்கும் கொஞ்சம் கொஞ்சமா கோபம் வரும்.. நிறையவே வருகிறது. அவரவர் போக்கில் அணுகுகின்றனர்.
ஓடிப்போன காதலர்களை சிரத்தை எடுத்து தேடும் ஊர் தலைவர் கேரக்டரில் அழகுமலை. நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு ஊர் தலைவராக இருக்கிறாராம். அவர்தான் படத்தை தயாரித்து, இயக்கியிருக்கிறார். அவரது தம்பியாக வரும் விநாயக் ஆக்ரோஷம் காட்டி தன் சொந்த பிரச்சனையாக நினைத்து தேடி அலைகிறார். அவருக்கு ஒரு காதலி, ஷர்மிஷா. அழகாக இருக்கிறார். கதையின் திருப்பங்களுக்கு உதவியாக இருக்கிறார், காவல்துறையில் பணிபுரிவதால்.
வக்கீலாக வரும் பேரரசு பேசும் வசனங்களை எல்லாம் பார்த்து, படத்தின் போக்கை மாற்றுவார் என்று நினைத்தால் ஒரு சில காட்சிகளிலேயே வருகிறார். விட்டால் ஓவராக போயிடுவார் என்று நினைத்தோ என்னவோ டைரக்டர் பேரரசுவை கண்ட்ரோல் செய்து விட்டனர்.
வடிவேல் இடத்தை பிடிக்க அவர் மாதிரியே நடித்து, எவ்வளவோ செய்கிறார், சென்ராயன். அதற்காக அன்ட்ராயர் தெரிகிற மாதிரி லுங்கியை மடித்து கட்டிக் கொண்டு பீடியை கடித்துக் கொண்டா பேசுவது, அதுவும் வடிவேலு மாதிரியே.
ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் கங்கை அமரன் எழுதி, பாடிய பாடல் நன்றாக உள்ளது.
கிளைமேக்ஸில் நாம் ஒன்று நினைக்க, அது ஒன்றாக இருக்கிறது.
-ராமு சரவணா
Comments are closed.