இந்தியாவின் மிகவும் போற்றப்படும் இதிகாசங்களில் ஒன்றான ராமயண கதையை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ‘ராமயணா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்டம், காட்சியமைப்புகள் மற்றும் திரை அளவைப் பற்றிய முன்னோட்டத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் இந்தியத் திரையுலகிற்கு பெருமை சேர்ப்பது மட்டுமல்லாது, ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் காலத்தால் அழியாத கதை சொல்லும் மரபை, உலகின் மிகப் பிரம்மாண்டமான திரைப்படங்களுக்குச் சமமாக பெரிய திரை அனுபவத்தின் மூலம் உலக அரங்கிற்குக் கொண்டு செல்ல இப்படம் முயல்கிறது.
தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 3டி தொழில்நுட்பத்தில் படம் வெளியாவதால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு இது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என நம்பப்படுகிறது.
இந்தியப் புராணம், பிரம்மாண்டமான திரைப்பட உருவாக்கம் மற்றும் பிரமிக்க வைக்கும் கதை சொல்லல் என உருவாகியுள்ள ‘ராமாயணா’ உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை நிச்சயம் கவரும்.
Comments are closed.