இனிதே நடந்தது ‘நெடுஞ்சாலை’ ஷிவதா நாயர் திருமணம்..!

199

shivada-nair-marriage
தமிழில் நடித்த ‘நெடுஞ்சாலை’ படம் மூலம் பாப்புலரான மலையாள நடிகை ஷிவதா நாயரின் திருமணம் நேற்று திருவனந்தபுரத்தில் இனிதே நடைபெற்றது.. மணமகன் முரளி கிருஷ்ணன் ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் பிசினஸ் என இரட்டை குதிரையில் சவாரி செய்பவர். துல்கர் அறிமுகமான ‘செகன்ட் ஷோ’ படத்தில் முரளி கிருஷ்ணனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்

ஷிவதாவும் முரளி கிருஷ்ணனும் நண்பர்களின் விழாக்களில் சந்தித்தபோது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறி, இன்று இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் வரை வெற்றிகரமாக வந்துவிட்டது. தற்போது பாபி சிம்ஹாவுடன் ‘பாம்புசட்டை’ மற்றும் அசோக் செல்வனுடன் ‘ஜீரோ’ ஆகிய படங்களில் நடித்து வரும் ஷிவதா நாயர் நல்ல கதைகளும் கேரக்டர்களும் தேடிவந்தால் தொடர்ந்து நடிப்பாராம்.

Comments are closed.