“நான் சொல்லாத விஷயத்தை அரசியலாக்க வேண்டாம்” ; லாரன்ஸ் வேண்டுகோள்..!

264

raghava lawrence

தனது முனி-4 படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்த ராகவா லாரன்ஸை தரிசனம் முடித்து வரும்போது மீடியா நபர்கள் சிலர் ஒன்றிரண்டு கேள்விகளை கேட்டுள்ளார்கள். அதில் சிலர் அவரது அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்களாம். கோயில் திறந்து ஒரு மண்டலம் முடிந்தது பற்றி சொன்ன லாரன்ஸிடம் நீட் விவகாரம் பற்றி கேட்டுள்ளார்கள்.

அதற்கு “காலம் பதில் சொல்லும்” என ஒற்றை வரியில் அவர் பதில் சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார். ஆனால் பின்னர் வெளியிடப்பட்ட செய்தியில் பா.ஜ.கவுக்கு காலம் பதில் சொல்லும் என்று அவர் சொன்னதாக வெளியிட்டுள்ளார்கள்..

இதுபற்றி விளக்கம் அளிக்கும் விதமாக லாரன்ஸ் கூறும்போது, “சேவையும் ஆன்மீகமும் தான் எனக்கு பிடித்த விஷயம்.. அரசியல் அல்ல.. அப்படி இருக்க நான் எப்படி பி.ஜே.பி பெயரை குறிப்பிடுவேன். அனிதா குடும்பத்திற்கு 15 லட்சம் நிதி கொடுத்தீர்களா ? என்று கேட்டால் அது கடவுளுக்கும் எனக்கும் அனிதா குடும்பத்திற்கும் மட்டும் தெரிந்தால் போதும்” என்று கூறியுள்ளார் லாரன்ஸ்..

மேலும் தயவு செய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள் என்றும் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments are closed.