விஷ்ணு-எழில் பட டைட்டில் பொங்கலுக்கு ரிலீஸ்..!

289

Ezhil - vishnu vishal movie

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் ரசிகர்களை வசியம் செய்த இயக்குனர் எழில்-விஷ்ணு விஷால் கூட்டணி மீண்டும் ஒரு அதிரடி காமெடி படத்தில் இணைந்துள்ளது. அந்தப்படத்தின் படப்பிடிப்பும் ஜரூராக நடைபெற்று வருகிறது.

கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, காமெடி வேடங்களில் யோகிபாபுவும் மொட்ட ராஜேந்திரனும் கலக்க உள்ளார்கள். இமான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். சிவாஜியின் பேரன் துஷ்யந்த் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

இந்தநிலையில் இந்தப்படத்தின் டைட்டிலை வரும் தைத்திருநாளான பொங்கல் அன்று அறிவிக்க உள்ளார்கள் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

Comments are closed.