துல்கரின் 25வது படத்துக்கு கௌதம் மேனன் செய்யும் கெளரவம்…!

கேரளாவில் கொண்டாடப்படும் நடிகராக துல்கர் சல்மான் இருந்தாலும், அவரது 25வது படமான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தமிழ்ப் படமாக அமைந்திருப்பது ஆச்சர்யமான விஷயம் தான். ரொமாண்டிக் படமாக உருவாகி வரும் இந்தப்படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார். ஃபிரான்சிஸ் தயாரிக்கிறார்.

கடந்த. 6 வருடங்களில் 25 படங்களில் நடித்திருக்கிறார் துல்கர். ஒரு திறமையான நடிகரை பாராட்ட, ஸ்டைலிஷ் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்த கௌதம் மேனனை தவிர யாரால் முடியும். அந்தவகையில்துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் லோகோவை இன்று மகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.

இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், “இந்த சர்ப்ரைஸை வெளியிட இது தான் சரியான நேரம். திரைத்துறையில் துல்கர் சல்மான் 6 வருடங்களை நிறைவு செய்திருக்கும் இந்த வேளையில், ரிது வர்மாவுடன் இணைந்து நடித்திருக்கும் அவரின் 25வது படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகிறது. இன்னும் பல ஆச்சர்யங்களும் காத்திருக்கின்றன” என குறிப்பிட்டிருக்கிறார் கௌதம் மேனன்.

Dulqar SalmanGautham MenonKannum Kannum Kollaiyadithalகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்கௌதம் மேனன்துல்கர் சல்மான்தேசிங் பெரியசாமி