விளையாட்டு தான் கைகொடுக்கவில்லை.. ஆனால் விளியாட்டை தடுக்கும் அரசியல் கைகொடுக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் ஜெய்.. காரணம் தற்போது அவர் நடித்து வரும் ‘புகழ்’ அப்படிப்பட்ட கதைக்களத்தை கொண்டது.
ஜெய்யின் ஊரில் இளைஞர்களுக்கு என உள்ள விளையாட்டு இடத்தை இடத்தை உள்ளூர் அரசியல்வாதியும், சென்னை மந்திரியும் இணைந்து அபகரித்து அதில் ஓட்டல்கட்ட நினைக்கிறார்கள். ஜெய் தன் நண்பர்களின் உதவியுடன் எப்படி மைதானத்தை மீட்கிறார் என்பது தான் படத்தின் கதையாம்.
‘உதயம் என்.எச்-4’ படத்தை இயக்கிய மணிமாறன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஜெய்கு ஜோடியாக சுரபி, நடிக்க இயக்குனர் மாரிமுத்து உள்ளூர் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். கருணாஸ் கவுன்சிலராக நடித்திருக்கிறார். விவேக் மெர்வின் இசை அமைத்துவரும் இந்தப்படத்தை. வருண் மணியன் தயாரிக்கிறார்.