ஹை வோல்டேஜ் வில்லனாக மாறிய ஜித்தன் ரமேஷ்..!

‘புலி வருது’, ‘நீ வேணும்டா செல்லம்’ உட்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஜித்தன் ரமேஷ்.. நீண்ட நாட்கள் படங்களில் நடிக்காமல் பட தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்த அவர் மீண்டும் நடிக்க வருகிறார். அதுவும் பக்கா வில்லனாக நடிக்கிறார். யஷ்வந்த் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் பிரமாண்டமான படத்தை வம்சி கிருஷ்ணா மல்லா என்பவர் இயக்குகிறார்.. இவர் இயக்கும் முதல் படம் இது

இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்பட வில்லை. கதாநாயகனாக சாய் நடிக்கிறார். கதாநாயகியாக வங்காளத்தை சேர்ந்த ஈனா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் இன்னும் முடிவாகவில்லை.. நேற்று சென்னையில் தி பார்க் ஹோட்டலில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது. ஜித்தன் ரமேஷுடன் ஏராளமான அழகிகள் ஆடிப் பாடுவது மாதிரியான பாடல் நடன இயக்குனர் பிரேம் ரக்‌ஷித் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது…

வேகமாக வளர உள்ள இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு முழுவதும் கோவாவில் நடக்க உள்ளது. கதாநாயகன் பொறுப்பிலிருந்து ஏன் வில்லனாக நடிக்கிறீர்கள் என்று ஜித்தன் ரமேஷிடம் கேட்டோம்…

படம் திரைக்கு வந்தவுடன் இந்த கேள்வி வராது சில மாதங்கள் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன் இயக்குனர் கேரக்டரை சொன்னவுடன் இந்த காரக்டரை விடக் கூடாது என்று முடிவெடுத்து ஓ.கே சொன்னேன். சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் ஹீரோவா வில்லனா ? அது மாதிரி தான் என் காரக்டரை சொல்லனும்னா “ஹை வோல்டேஜ் வில்லன்” என்று சொல்லலாம் என்றார் ஜித்தன் ரமேஷ்

'நீ வேணும்டா செல்லம்'புலி வருது'ஜித்தன் ரமேஷ்பிரேம் ரக்‌ஷித்ஹை வோல்டேஜ் வில்லன்