அதன்பிறகு யாருடைய படத்தில் நடிக்கிறார் என்பது பற்றி அவர் இன்னும் வாய் திறக்கவில்லை. ஒரு பக்கம் கௌதம் மேனன் டைரக்ஷனில் நடிப்பர் என சொல்லப்பட்டு வந்தது. அவரோ தற்போதுதான் சிம்பு நடிக்கும் படத்தை துவங்கி இருக்கிறார். அதனால் விக்ரமின் அடுத்த படம் டைரக்டர் தரணிக்குத்தான் என்கின்றனர் சினிமா வட்டாரத்தில்.
பாலா இயக்கிய ‘சேது’ படம் மூலம்தான் விக்ரமுக்கு தமிழ்சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் அதை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக விக்ரமை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக வலம் வரச்செய்தவர் இயக்குனர் தரணி என்பது மறுக்க முடியாத உண்மை.
இவர்கள் இருவரும் இணைந்த ‘தில்’, ‘தூள்’ படங்களின் வெற்றியை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியுமா? மேலும் இருவரும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்களும் கூட. இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்தும்கூட இருவரும் நீண்ட நாட்களாக இணைந்து படம் பண்ணாமல் இருந்தார்கள். இப்போது தரணியும் விக்ரமும் அடுத்த ஆண்டில் கை கோர்க்கப் போகிறார்கள் என்றே தெரிகிறது. படத்திற்கு ‘ராஸ்கல்’ என்றும் அதிரடியாக பெயர் வைத்திருக்கிறார்கள். அப்படி இணைந்தால் தரணி-விக்ரம் கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை நிச்சயம் ருசிக்கும் என நம்பலாம்.
666265 185811I always was interested in this subject and still am, regards for posting . 465194