
இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்து அனைவரின் மனதிலும் பதிந்த ரித்திகா சிங், ஆண்டவன் கட்டளை’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் தன்னை இன்னும் அழுத்தமாக தக்கவைத்துக்கொண்டார். தற்போது தெலுங்கில் வெங்கடேஷுடன் ‘இறுதிச்சுற்று’ ரீமேக், மற்றும் தமிழில் லாரன்ஸுடன் ‘சிவலிங்கா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரித்திகா..
அடுத்ததாக அரவிந்த்சாமி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம் ரித்திகா. அரவிந்தசாமியை வைத்து பல வருடங்களுக்கு முன் ‘புதையல்’ என்கிற படத்தை இயக்கிய செல்வா தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப்படத்தில் அரவிந்த்சாமி போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறாராம்.
Comments are closed.