பிப்ரவரியில் ‘வாலு’..! சம்மரில் ‘இது நம்ம ஆளு’..!

241

 

சிம்பு ரசிகர்களுக்கு இந்த வருடமும் ஏமாற்றமானதாகவே அமைந்துவிட்டது.. ஆம்.. கிறிஸ்துமஸ் ரிலீசாக எதிர்பார்க்கப்பட்ட ‘வாலு’ திரைப்படத்தை தற்போது பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைத்துவிட்டார்களாம்.. ரஜினி, விக்ரம், அஜித் என பொங்கல் வரை பெரிய படங்கள் களம் இறங்குவதும் காரணம் என தெரிகிறது..

 

இதுபற்றி சிம்பு தனது ரசிகர்களுக்கு விடுத்துள்ள செய்தியில், “என் வேலை நடிப்பதுடன் நின்று விடுகிறது. அதன் வியாபாரத்திலோ, வினியோகத்திலோ நான் தலையிடுவது இல்லை. ரிலீஸ் பற்றி முடிவுசெய்வது படத்தின் தயாரிப்பாளர்கள் தான்.. ‘வாலு’ படம் பிப்ரவரி ரிலீஸ் ஆக வெளியாகிறது. தொடர்ந்து ‘இது நம்ம ஆளு’ சம்மரில் வெளியாகிறது. இந்த வருடம் என் படம் வெளியாகாதது எனக்குமே ஏமாற்றம் தான்” என கூறியுள்ளார்.

Comments are closed.