மாயா இயக்குனரின் ‘கேம் ஓவர்’..!

266

game over

இறுதி சுற்று, விக்ரம் வேதா, தமிழ்படம் 2 வெற்றி படங்களுக்கு பிறகு, தயாரிப்பு நிறுவனம் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து “கேம் ஓவர்” எனும் புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

2௦15ல் நயன்தாரா நடிப்பில் உருவான “மாயா’ வெற்றி படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். டாப்ஸி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

“கேம் ஓவர்” படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. மேலும் தமிழ் நாடு மற்றும் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

Comments are closed.