வனங்களை பாதுகாக்க வலியுறுத்தும் ‘கடம்பன்’ ட்ரெய்லர்..!

244

Kadamban trailer

ஒருசில இயக்குனர்களே தங்களது முதல் படத்திற்கும் தாங்கள் அடுத்ததாக இயக்கப்போகும் இரண்டாவது படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் பார்த்துக்கொள்வதில் கவனமாக இருப்பார்கள்.. இயக்குனர் ராகவாவும் அப்படிப்பட்ட ஒரு இயக்குனர் தான்.. இல்லையென்றால் நகரத்து பின்னணியில் கிராமத்து தாத்தா-பேரன் அன்பை ‘மஞ்சப்பை’ மூலம் சொன்னவர், அடுத்த படத்தில் வனங்களை பாதுகாக்க வலியுறுத்தி ‘கடம்பன்’ படத்தை எடுப்பாரா என்ன..?

ஆர்யா, கேத்தரின் தெரசா நடிக்கும் இந்தப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.. ட்ரெய்லரை பார்க்கும்போது வனங்களை சூறையாட முயலும் அதிகார வர்க்கமும் அதை காப்பாற்ற போராடும் மண்ணின் மைந்தர்களும் தன கதைக்களம் என்பது நன்றாகவே தெரிகிறது.. ஜெயம் ரவிக்கு ஒரு ‘பேராண்மை’ போல நிச்சயமாக ஆர்யாவுக்கு இந்த ‘கடம்பன்’ படம் முக்கியமானதாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.

Comments are closed.