ரஜினி முருகன் என ரஜினி ரசிகன் பெயரில் படம் வெளிவரும்போது, எம்.ஜி.ஆர்.பாண்டியன் என எம்.ஜி.ஆரின் ரசிகன் பெயரில் படம் உருவாவதில் ஆச்சர்யம் என்ன இருக்கப்போகிறது. பழைய திரைப்படங்களின் பெயர்களிலேயே புதிய திரைப்படங்கள் வந்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், எம்.ஜி.ஆர். என்ற ஒரு மாபெரும் அரசியல் தலைவரின் பெயரையும், பாண்டியன் என்ற சூப்பர்ஸ்டாரின் திரைப்பட பெயரையும் இணைத்து, எம்.ஜி.ஆர். பாண்டியன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இத்திரைப்படம் டைட்டிலிலேயே அதிரடியை கிளப்பியிருக்கிறது
இயக்குனர் அமீர் நாயகனாகவும்,555 சாந்தினி நாயகியாகவும் நடிக்க, மூன் பிக்சர்ஸ் ஆதம்பாவா இந்தப்படத்தை தயாரித்து இயக்குகிறார். இத்திரைப்படம் அமைதிப்படைக்குப்பிறகு மீண்டும் ஒரு பென்ச் மார்க் அரசியல் படமாக இருக்கும். எம்.ஜி.ஆர் நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடிவரும் இவ்வேளையில் ஒரு உண்மையான எம்.ஜி.ஆர் ரசிகனை இப்படத்தில் காணலாம். அமீரின் முழு ஒத்துழைப்பில் படம் சிறப்பாக வந்துள்ளதாம்.
வைரமுத்து, பா.விஜய் பாடல்கள் எழுத வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே நான்கு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அமீர் வட சென்னை மற்றும் சந்தனத்தேவன் படத்திலும் பிசியாக இருப்பதால் இரண்டிற்கும் இடையில் தேதிகள் பாதிக்காமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனர் ஆதம் பாவா கூறுகிறார் தேனி, மதுரை, பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

Comments are closed.