பணக்கார பெண்ணை வளைக்க பந்தா காட்டும் ஹரிஷ் கல்யாண்

269

hareesh kalyan

பிக் பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாணும் ரைசாவும் இணைந்து நடித்துள்ள படம் ‘பியர் பிரேம காதல்’..வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் பியார் பிரேமா காதல் படத்தை ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸுக்காக இர்ஃபான் மாலிக்குடன் சேர்ந்து யுவன் ஷங்கர் ராஜாவும் மற்றும் கே ப்ரொடக்‌ஷன்ஸ் எஸ் என் ராஜராஜனும் தயாரிக்கிறார்கள். இந்தப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ஹரீஷ் கல்யாண் என்ன சொல்கிறார்..?

“எல்லோரும் படத்தில் என்னுடைய ஆடைகள் பல்வேறு விதமாக கலந்திருப்பதை கவனித்திருப்பார்கள். ஒருபுறம் லுங்கி மற்றும் மற்றொரு புறம் மாடர்ன் ட்ரெஸ். ஒரு அப்பாவி நடுத்தர வர்க்க பையன், உயர்தர வர்க்க பெண்ணை காதலிக்க, ஒரு ஸ்டைலான பணக்கார பையனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் உள்ளார்ந்த ஆசை உள்ளது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பியார் பிரேமா காதல் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஒரு காதல் படமாகும். இது ஒரு ஒரிஜினல் திரைப்படம் என்று நான் கூறுவேன்” என்கிறார்.
ஹரீஷ் கல்யாண்.

Comments are closed.