‘சாகசம்’ பண்ண நாள் குறிச்சுட்டார் பிரசாந்த்..!

252

ஒன்றல்ல, இரண்டல்ல.. படம் ஆரம்பித்து பத்து வருடம் கழித்து தான் நடித்துள்ள புலன் விசாரணை-2 வெளியானதில் பிரசாந்திற்கு ஒருபக்கம் சந்தோசம் தான். படத்திலும் சில சாதகமான அம்சங்கள் இருப்பதால் லேட்டாக வந்தாலும் கெட்டபெயர் வாங்காமல் தப்பித்துவிடும் என்றே தெரிகிறது.

தற்போது ‘புலன் விசாரணை-2’வின் வரவால், தற்போது தான் நடித்துவரும் ‘சாகசம்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியையும் கொஞ்சம் தள்ளிவைத்துள்ளார் பிரசாந்த். அதுமட்டுமல்ல, படத்தை ஏப்ரல்-6ஆம் தேதி ரிலீஸ் பண்ணவும் நாள் குறித்துவிட்டார் பிரசாந்த்.

அருண்ராஜ் வர்மா இயக்கியுள்ள இந்தப்படம் தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்த, ‘ஜூலாயி’ படத்தின் ரீமேக் தான். இந்தி கவர்ச்சி நடிகை நர்கீஸ் பக்ரி ஒரு பாட்டுக்கு பிரசாந்துடன் இணைந்து செம ஆட்டம் போட்டிருக்கிறார். தமன் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தில் ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன், சிம்பு ஆகியோர் ஒவ்வொரு பாடலை பாடியுள்ளார்கள்.

Comments are closed.