அக்மார்க் காதல் படமாக உருவாகும் ‘தள்ளிப்போகாதே’

304


இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் காதல் திரைப்படம் “தள்ளிப்போகாதே” அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திரைக்கு தயாராகியுள்ளது. தொடர்ந்து கமர்ஷியல் படங்களை இயக்கி வந்த ஆர்.கண்ணன் தற்போது, நீண்ட இடைவேளைக்கு பிறகு, தற்போது தனது தனித்தன்மை மிகுந்த ரொமான்ஸ் வகை படத்திற்கு திரும்பியுள்ளார்பூமராங் படத்திற்கு பிறகு அதற்வாவுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

அதர்வா ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க, அமிதாஷ் ஆடுகளம் நரேன், வித்யூலேகா ராமன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதியுள்ளார்.

இப்படத்தின் டப்பிங் பணிகள் முதல், அனைத்து கட்ட பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது படத்தின் விளம்பர முன்னோட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன. படத்தின் திரை வெளியீடு குறித்த அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Comments are closed.