“கற்றவர்கள் சதவீதம் அதிகரிப்பு ; பாதுகாப்போ குறைவு” ; வைரமுத்து கருத்து..!

275

vairamuthu 1

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் விழா வரும் ஜூலை-13ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.. இதனையொட்டி மதுரைக்கு வருகை தந்துள்ளார் வைரமுத்து. அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசும்போது தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பின்மை பற்றியும் குறிப்பிட்டார் வைரமுத்து.

இதுபற்றி வைரமுத்து பேசும்போது, “28 சதவீதம் கல்வி கற்றவர்கள் இருந்த தமிழகம் பாதுகாப்பாக இருந்தது. தற்போது 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கல்வி கற்றவர்கள் உள்ளனர். ஆனால் தமிழகம் பாதுகாப்பாக இல்லை. அறிவு, பண்பாடு, கவிதை கலந்த கல்வியை பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும். இப்போது நடப்பது தொழில்நுட்ப நூற்றாண்டு. வரப்போவது கல்வியின் நூற்றாண்டு. இவை இரண்டும் இல்லாமல் ஒரு அங்குலத்தைக்கூட அடுத்தத் தலைமுறை கடக்க முடியாது. இதனால் தொழில் நுட்பம், கல்வியை காக்கின்ற கடப்பாடு புதிய தலைமுறைக்கு உள்ளது” என்று அவர் கூறினார்.

Comments are closed.