விக்ரம் படத்தில் வில்லனாக திமிரு நடிகர்..!

272

vinayakan

விஷால் நடித்த ‘திமிரு’ படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கையாளாக முக்கிய வேடத்தில் நடித்தவர் விநாயகன்.. ஆனால் ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும், தமிழில் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல், மலையாள சினிமாவில் மட்டும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான ‘கம்மட்டிப்பாடம்’ படம், வில்லன் நடிகராக வலம் வந்த விநாயகனின் குணச்சித்திர நடிப்பை வெளிக்கொண்டு வந்ததுடன், சில விருதுகளையும் பெற்று தந்தது.. அதனால் மீண்டும் லைம்லைட்டுக்குள் வந்துள்ள விநாயகன் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் கௌதம் மேனன் டைரக்சனில் விக்ரம் நடித்துவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் விநாயகன்

Comments are closed.