
பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தில் சிறந்த பின்னணி இசை அமைத்ததற்காக இசைஞானி இளையராஜாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது… ஆனால் மற்ற பிரிவுகளில் விருதுபெற்ற சமுத்திரகனி, ரித்திகா சிங் ஆகியோர்கள் மட்டும் ஜனாதிபதி கையால் விருது வாங்கினார்களே தவிர, இளையராஜா அந்த விழாவில் கலந்துகொள்ளவும் இல்லை. அவர் சார்பாக வேறு யாரும் அந்த விருதை பெற்றுக்கொள்ளவும் இல்லை.
ஆனால் இது குறித்து இப்போது இளையராஜாவிடம் இருந்தே விளக்கம் வந்திருக்கிறது.. “ஒரு படத்தில் டைரக்சன், ஒளிப்பதிவு, எடிட்டிங் என மற்ற பிரிவுகளில் மட்டும் ஒரே விருதாக அளிக்கும்போது இசையை மட்டும் ஏன் பாடல்கள், பின்னணி இசை என இரண்டாக பிரிக்கிறீர்கள்.. அப்படியானால் நான் பாதி வேலையைத்தான் சரியாக செய்தேன் என்றுதானே நினைக்கவேண்டியுள்ளது. எனக்கு இதில் உடன்பாடு இல்லை” என கூறியுள்ளதோடு இதுகுறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறைக்கும் கையோடு கடிதம் எழுதியுள்ளார் இளையராஜா.
Comments are closed.