*டி. இமான் இசையமைப்பில் தந்தை- மகள் பாசத்தை பேசும் ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல்!*

அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்திலிருந்து, தந்தை – மகள் பாசத்தை அழகாகப் பேசும் பாடலான ‘ஜோ ஜோ மா’ வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ள இப்பாடலை ஹரிசரண் பாடியுள்ளார். பாடலாசிரியர் மோகன்ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

பெற்றோரின் அன்பையும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத பந்தத்தையும் இசையின் மூலம் வெளிப்படுத்தும் இப்பாடல், கேட்பவர்களின் மனதை நெகிழ செய்யும்.

தந்தை- மகள் பாசத்தை பேசும் ‘விஸ்வாசம்’ படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல், திரையில் இடம்பெற்ற ஒரு பாடலாக மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையோடும் உணர்வுகளோடும் கலந்த ஒரு பாடலாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

அதேபோன்ற உணர்வுப்பூர்வமான பாடலாக ‘ஜோ ஜோ மா’ பாடலை டி. இமான் உருவாக்கியுள்ளார். ஹரிசரணின் உணர்வுப்பூர்வமான குரலும் மோகன்ராஜனனின் வரிகளும் இப்பாடலுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இந்த பாடல் படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, புஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனிஷ்காந்த் மற்றும் ஆர்யன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்பிரமணி இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ஏ.கே. நாகராஜன் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன் மற்றும் கலை இயக்குநர் முனி கிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.