‘ வெந்து தணிந்தது காடு ‘ படத்தில் சிம்பு ஜோடியாக நடித்திருந்த சித்தி இத்னானி மற்றும் தேவதர்ஷினி, அஞ்சலி நாயர், டிராவிட் செல்வம், ஆர்.ஜே தீபக், சினிமாவாலா சதீஷ், குரேஷி, சசி செல்வராஜ் நடிப்பில் வி எம் மோர்கன் தயாரிப்பில் ராகவ் மிர்தந்த் எழுதி, இயக்கி வெளிவந்திருக்கும் ஹாரர், காமெடி, பேண்டஸி All Group பார்த்து ரசிக்கக் கூடிய படமாக வந்திருக்கிறது, ‘ DRONES ‘.
கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் ஆன மூன்று மாணவர்கள் ஒரு SCIENTIST வீட்டில் அடைக்கலம் ஆகின்றனர். ஒரு மர்மமான Miniature பொம்மை கலைஞர், மனிதர்களை பொம்மைகளாக மாற்றி சிறை பிடிக்கும் ஒரு மாந்திரீக சூனியக்காரி, தூக்கத்தில் நடக்கும் வியாதி உடைய ஒரு மாணவன், காதலால் சாபம் பெற்ற போலீஸ் அதிகாரி என்று வித்தியாசமான கேரக்டர்ஸ் ஒன்று போல இணைகிறார்கள்.
அங்கு அவர்கள் சந்திக்கும் அழகான தேவதை சித்தி இத்னானி. அதேசமயம் அவள் அவலட்சனமான பேய்க் கிழவி தேவதர்ஷினி இவர்கள் இரண்டு பேரும் அந்த இடத்தில் எப்படி. அங்கே மாட்டிக் கொண்டு மீள முடியாமல் தவிக்கும் மாணவர்கள் பிளஸ் தோழி எப்படி நிலைமையை சமாளிக்கிறார்கள். முடிந்ததா, அல்லது முடியாமல் போனதா என்பதை பேண்டஸி காமெடி ஹாரர் ஆக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
அங்கே மாட்டிக் கொள்ளும் மூன்று மாணவர்களான அஞ்சலி, டிராவிட் R.J. தீபக் விழிப்புதுங்க மாட்டிக்கொண்டு முழிப்பது செம. எமோஷனலையும் கொடுக்க வேண்டிய விதத்தில் கொடுத்து கவருகிறார்கள். காதல் சாபம் பெற்று அந்த பேய் வீட்டுக்கு வரும் போலீஸ் அதிகாரி கூமாப்பட்டி மாதவனாக வரும் சினிமாவாலா சதீஷ்,அவருடைய உதவியாளராக இருந்து அவரையே கலாய்த்து கொண்டிருக்கும் குரேஷி நன்றாக நடித்துள்ளனர்.
எல்லோரும் பார்க்க வேண்டும் முதலில்..என்ற நோக்கத்தோடு வல்காரிட்டி, டபுள் மீனிங் டயலாக்ஸ் இல்லாமல் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். கதை நடக்கும் குறிப்பிட்ட வீடு, லொக்கேஷன் மற்றும் ஆளில்லாத ரோடுதான் பெரும்பாலும் படமாக்கப்பட்டு இருக்கும் இடங்கள். அங்கே வந்த முகங்களே வந்தாலும் சலிப்பு தட்டாத வண்ணம் Present பண்ணி இருக்கிறார்கள். திரைக்கதையில் இன்னும் சூடு வைத்து வேகப்படுத்தியிருக்கலாம். இருந்தாலும் படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி சூப்பர்.
தேவதர்ஷினியின் கன்றாவி முக மேக் அப்புடன் சூனியக்கார கிழவி கேரக்டர் சிரிப்பு, நடிப்பு அசத்தல். அந்நியன் போல மாறும் சித்தி இத்னானியின் கேரக்டருக்கு உள்ள முக்கியத்துவம் போகப் போகத் தான் தெரிகிறது.
DRONES என்று டைட்டில் வைத்து விட்டு Drones கேமராவை காட்டாமல் இருக்க முடியுமா. சாலை, வீட்டின் வளைவுகளில் புகுந்து ட்ரோன்ஸும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பேய் என்றால் மிரட்டல் என்பதெல்லாம் போய் காமெடி பேயாகி சினிமாவில் வலம் வருவது கொஞ்ச நாளாக, அதாவது காஞ்சனாவிலிருந்து தொடர்கிறது. அதிலிருந்து வித்தியாசமான ஒன்றை கொடுக்க நினைத்திருக்கும் படக்குழு படம் பார்ப்பவர்களை கவர்வார்கள் என்றே நினைக்கத் தோணுது.
பேய் கிழவியின் கணவர்கள் விடுதலை பெற்று வெளியே ஓடுவது செம காமெடி…
-ராமு சரவணா