சுரேஷ் கிருஷ்ணாவின் ‘ஆஹா’ படம் மாதிரி உருவாகியுள்ள ‘நான் செய்த குறும்பு’..!

323

naan seytha kurumbu

ரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கத்தில் சந்திரன் நடிக்கும் படம் ‘நான் செய்த குறும்பு ‘.இப்படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் உள்ள பிள்ளையார்
கோவிலில் போடப்பட்டது. தொடர்ந்து பிரசாத் லேப் ப்ரிவியூ தியேட்டரில் படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இது வழக்கமான விழாவாக இல்லாமல் ஒரு வித்தியாசமானதாக அமைந்து இருந்தது.

ஆம்.. இந்த விழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அப்பெண்மணிகள் ஐவரையும் மேடையில் அமர வைத்தனர். மங்கல இசை ஒலித்தது . வேதமந்திரம் முழங்கியது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மாலையிட்டு மஞ்சள் பூசி, சந்தனம் பூசி , குங்குமம் இட்டு ,புது வளையல்கள் அணிவித்து அட்சதை தூவி, இனிப்புகள் ஊட்டினர்.

அவர்களுக்குப் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு படக்குழுவின் சார்பில் பெருமைப்படுத்தப்பட்டனர். இயக்குநர் மற்றும் படக் குழுவினர் வளைகாப்பு நடத்தப்பட்ட பெண்மணிகள் காலில் விழுந்து வணங்கினார்கள் . அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

விழாவில் படத்தின் இயக்குநர் மகாவிஷ்ணு பேசும் போது, “நான் ஸ்டாண்ட் அப் காமெடி, அசத்தப்போவது யாரு என்று டிவி மீடியாவில் சன் டிவியில் 9 ஆண்டுகள் இருந்தேன். சினிமா வந்து 3 ஆண்டுகள் ஆகின்றன.

ஒரு நல்ல மேனேஜர் கொண்ட படக் குழு அமைந்து விட்டால் சினிமாவில் இழப்புக்கு இடமே இல்லை .எனக்கு அப்படி அமைந்துள்ளது.. ‘நான் செய்த குறும்பு ‘. ஒரு ரொமாண்டிக் காமெடி சஸ்பென்ஸ் த்ரில்லர் குடும்பப் படம் என்று கூறலாம்.

நாயகன் சந்திரன் பேசும் போது , ” இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்து ட்விட்டரில் பலவிதமான கருத்துகள் வந்தன. சிலர் ஒரு மாதிரியான படமாக இருக்குமோ என்று கூறியிருந்தார்கள். நான் சொல்கிறேன் இது சுரேஷ் கிருஷ்ணாவின் ‘ஆஹா’ படம் மாதிரி குடும்பத்துடன் பார்க்கும்படி இருக்கும். பெண்கள் படும் கஷ்டம் ஆண்களும் பட்டால் தான் தெரியும் என்று சொல்கிற படம் இது” ” என்றார்

Comments are closed.