வரலட்சுமி, சத்யராஜ், கிஷோர், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துவரும் படம் “எச்சரிக்கை ” இது மனிதர்கள் நடமாடும் இடம் .இந்தப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் சர்ஜுன்… இவர் மணிரத்னம் AR.முருகதாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்…அத்துடன் யூ டியூப்பில் பிரபலமான மா,லஷ்மி ஆகிய குறும்படங்களை இயக்கியவர்….
சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் விஜய்சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லேன் கோலிசோடா 2 போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி தற்போது இந்தப்படத்தை மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார்..
இன்று சினிமாத்துறைக்குத் தேவை வினியோகஸ்தர்கள் என்கிற “ஆக்சிசன்” தான்…நல்ல படம் என்று பாராட்டப்பட்ட பல படங்கள் நல்ல விநியோகஸ்தர்கள் இல்லாமல் தோல்வியை தழுவிய சோகங்கள் உண்டு..
அப்படி நல்ல படங்களை கண்டு பிடித்து அதை முறைப்படி மொத்தமாக வாங்கி சிறப்பாக வெளியிட்டு நல்ல விநியோகஸ்தர் என்று பெயரெடுத்தவர் கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் வி.சத்யமூர்த்தி..
“இது கிரைம் திரில்லர் படம்…எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்கிற டைட்டிலிலேயே இது திரில்லர் படம் என்று சொல்லி இருக்கிறோம்… சத்யராஜ் சார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக தூள் கிளப்பி இருக்கிறார்.. கிட்நாப் பற்றி இதில் சொல்லி இருக்கிறோம். பாண்டிச்சேரி சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது..படத்தை பார்த்த கிளாப் போர்டு சத்யமூர்த்தி பாராட்டியதோடு மொத்தமாக வாங்கி ரிலீஸ் செய்கிறார் …இம்மாதம் படம் வெளியாகிறது” என்கிறார் இயக்குனர்…
கிளாப் போர்டு புரொடக்சன்ஸ் தற்போது யூ டியூப் புகழ் இளைஞர்களை வைத்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படத்தையும் தயாரித்து முடிற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது…இந்தப் படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்க இருக்கிறது

Comments are closed.