டி.பி.கஜேந்திரன் இயக்கும் ‘ஆசை தோசை’

220

‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்று ஒரு பழமொழி உண்டு. அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ இயக்குனரும் காமெடி நடிகருமான டி.பி.கஜேந்திரனுக்கு நன்றாகவே பொருந்தும். கிட்டத்தட்ட இருபது படங்களை டைரக்ட் செய்துள்ள டி.பி.கஜேந்திரன் பிரபுவை வைத்து இயக்கிய ‘பந்தா பரமசிவம்’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு கோடிகளை வாரிச்சுருட்டியது.

ஆனால் மீண்டும் டைரக்ஷன் பக்கம் செல்ல முடியாமல் படுபிஸியாக தற்போது இருபது படங்களுக்கு மேல் காமெடி, குணசித்திர நடிகராக நடித்து கொண்டிருக்கிறார் டி.பி.கஜேந்திரன். ஆனால் அதை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு தற்போது மீண்டும் அவர் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். தான் இயக்கும் புதிய படத்திற்கு ‘ஆசை தோசை’ என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளார்.

இந்தப்படத்தில் இன்றைய முன்னணி நகைச்சுவை நடிகர் ஒருவர் கதாநாயகனாக நடிப்பார் என தெரிகிறது. ஏராளமான நகைச்சுவை பட்டாளங்களுடன் காமெடியாக உருவாகும் இந்தப்படத்தை டி.பி.கஜேந்திரனின் முத்துலட்சுமி மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தையும் இப்போதே இந்தி ரீமேக்கிற்கும் புக் பண்ணிவைத்துவிடுவார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

2 Comments
  1. 779527 842627Im impressed, I need to say. Genuinely rarely do you encounter a weblog thats both educative and entertaining, and let me let you know, you may have hit the nail about the head. Your concept is outstanding; ab muscles something that too few men and women are speaking intelligently about. Im delighted i discovered this in my hunt for something about it. 589550

  2. 855339 974577I only wish that I had the ability to convey what I wanted to say within the manner that you have presented this data. Thanks. 232424

Leave A Reply

Your email address will not be published.