ஜெயிலர் 2- விமர்சனம் 

ரஜினியின் படங்கள் இதுவரை இரண்டாம் பாகமாக அவர் நடித்து வெளிவந்ததில்லை. முதல் முறையாக ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகமாக ஜெயிலர்-2 இப்போது வெளியாகி இருக்கிறது. Doubt- இல்லாமல் பெரிய அளவில் கலெக்ட் செய்யும் என்பது உறுதி. ‘ டைகர் முத்துவேல் பாண்டியனாக ‘ Silent Revolution செய்திருக்கிறார் ரஜினி. முதல் பாகம் முடிந்த சில மாதங்களிலேயே ஆரம்பித்ததுப் போல ஜெயிலர்-2 -வின் கதை. இரண்டாம் பாகத்தில் கிளைமாக்ஸில் மகன் வசந்த் ரவி இறப்புக்குப் பிறகு கோயம்புத்தூர் outer பகுதியில் மனைவி ரம்யா கிருஷ்ணன், மருமகள் மிருணா, பேரனுடன் வசிக்கிறார், எளிமையாக. ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மேனேஜராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் ரஜினி.

கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து நகராட்சி அதிகாரி பக்ஸ் உடன் வீட்டு குழாய் தண்ணீர் பிரச்சினை என்று வேகம் எடுக்கும் திரைக்கதை, வெத்து உதார் நமோ நாராயணனுடன் பிரச்சினை. அவரிடமே டிரைவராக வேலைக்கு சேர்வது, சாலையின் குறுக்கே வரும் யோகிபாபுவை நமோ நாராயணனுடன் வம்பில் மாட்ட விடுவது, சிலை கடத்தல் சுராஜ் வெஞ்சிரமூடு, நமோ நாராயணன் Connectivity ஏற்படுத்துவது என்று செம கலகலப்பாக, ஜாலியாக முதல் பாதி. அந்த கலகலப்புக்கு ரஜினி, நமோ நாராயணன், யோகி பாபு சுராஜ பங்கு முக்கியம்.

முதல் பாகத்தில் தன்னுடைய மகன் மரணத்திற்குப் பின் கொலை செய்யப்பட்ட வர்மன் (விநாயகனுக்கு) மேலே இருக்கும் Boss-ஆல் தனது குடும்பத்துக்கு ஆபத்து எதுவும் வந்துவிடக்கூடாது என்று ஒரு பக்கம் அவனை தேடும் வேளையின் நடுவில் தான் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்ப்பது, நமோ நாராயணனுக்கு டிரைவராக இருப்பது, சிலை கடத்தல் சுராஜிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது என்று எல்லாவற்றையும் செய்கிறார் ரஜினி.

உச்சநிலையில் அவர்களுக்கெல்லாம் தலைவன் பாஸ் S.J. சூர்யாவை நெருங்கிய அதே வேளையில், விநாயகனை கொன்றது யார், அப்போது தன்னுடைய மூன்று கண்டெய்னரை எடுத்துப்போன அவனையும் தேடும் முயற்சியில் S.J. சூர்யா. SECOND HALF-ல் கதையை Open செய்து சொல்லிவிடும் அவசியத்தில் இயக்குனர் நெல்சன். சென்டிமென்ட், எமோஷனல் எல்லாம் கலந்து கொடுத்து நிறைவு தருகிறார். ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி, எல்லா தரப்பினருக் கும் ஜெயிலர்-2வையும், ரஜினியையும் பிடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அனிருத் Rerecording மற்றும் இரண்டு பாடல்களில் அதகளப்படுத்தி இருக்கிறார். நமோ நாராயணனுக்கு எதிர்பாராத சூப்பர் கேரக்டர். இதில் அவரும் எந்தவித தயக்கமுமின்றி பிய்த்து உதறி இருக்கிறார். ரம்யா கிருஷ்ணன், மிருணா மேனன், பேரன் கதையின் தேவைக்காக வந்து போகிறார்கள். கேமியோக்கள் மோகன்லால், சிவராஜ் குமார், ஹ்ருத்திக் ரோஷன், விஜய் சேதுபதி அளவாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

ரஜினி, வித்யா பாலன் காஃபி, குட் மார்னிங் மெசேஜ் மேட்டர் கலகலப்பு. படத்தின் முதல் பாதி ரஜினி பிளஸ் டைரக்டர் படமாகவும், இரண்டாம் பாதியில் முழுக்க ரஜினி படமாகவும் மொத்தத்தில் ஜெய்லர் 2 வெற்றி பெற உதவி இருக்கிறது.